ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஆக்கப்பணியில் இத்தாலி பங்கெடுப்பு

2019-03-23 20:36:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஆக்கப்பணியைக் கூட்டாக முன்னேற்றுவது பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணையில் சீன மற்றும் இத்தாலி அரசுகள் 23ஆம் நாள் முற்பகல் ரோம் நகரில் கையொப்பமிட்டன. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கும், இத்தாலி தலைமையமைச்சர் கோன்டும் இக்குறிப்பாணையில் கையொப்பமிடும் விழாவில் கலந்து கொண்டனர். 7 மேலை நாடுகள் குழுவில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையை சீனாவுடன் உருவாக்கும் முதலாவது நாடு இந்தாலியாகும்.

சீன மற்றும் இத்தாலியக் கூட்டு அறிக்கையின்படி, ஒன்றுக்கொன்றான தொடர்பை முன்னேற்றுவதில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கு, மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்பதை இரு தரப்பும் புரிந்து கொண்டுள்ளன. இம்முன்மொழிவு, ஐரோப்பியப் போக்குவரத்து வலைப்பின்னலுடன் இணைப்பதை வலுப்படுத்தி, துறைமுகம், சரக்கு புழக்கம், கடல் சரக்கு ஏற்றியிறக்கல் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக இரு தரப்பும் தெரிவித்தன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்