அமெரிக்கா தன்னையே முட்டாளாக்கக் கூடாது

வாணி 2019-05-15 19:54:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் ஒரு கூற்றைப் பரப்பி வருகின்றனர். அமெரிக்கா ஒரு முதுகுப்பை போல் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அதிலிருந்து பணத்தைத் திருடி வருகின்றன என்று அவர்கள் கூறினர். இத்தகைய கூற்றைத் தெரிவிப்பவர்கள் அடிப்படை பொருளாதார அறிவு குறைவானவர்கள். மட்டுமல்லாமல் தன்னை தானே முட்டாளாக்கியும் கொள்கின்றனர்.

சந்தை விதிகளின் படி, வர்த்தகத்தில் இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டால், அவை இரண்டும் நலன் பெறும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகமும் அதே மாதிரியில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளில், இரு தரப்பு வர்த்தகம் மூலம் இரு நாடுகளும் மாபெரும் பொருளாதார நலன்களைப் பெற்றுள்ளன.

சீனாவின் பெரும் வளர்ச்சி சீன மக்களின் சொந்த உழைப்பினால் உருவாக்கப்பட்டது. அதனால், அமெரிக்காவின் திருடர் கருத்தினால் உலகை ஏமாற்ற முடியாது. சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்