புதிய வளர்ச்சி கருத்து பற்றி ஷீ ச்சின்பிங்கின் கட்டுரை

2019-05-16 10:21:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷீ ச்சின்பிங்கின் புதிய வளர்ச்சிக் கருத்தை ஆழமாக புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலான முக்கிய கட்டுரை மே 16ஆம் நாள் சியு ட்சி எனும் இழலில் வெளியிடப்பட்டது.

புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நெடுநோக்கு திட்டத்தைப் பெரிதும் நடைமுறைப்படுத்தி, புத்தாக்கம் மூலம் வளர்ச்சிக்கான புதிய இயக்கு ஆற்றலை உருவாக்க வேண்டும். பிரதேசங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி, நகர-கிராமப்புற ஒருங்கிணைந்த வளர்ச்சி, பொருளாதார ஆக்கப்பணிக்கும், தேசியப் பாதுகாப்பு ஆக்கப்பணிக்கும் இடையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்ற வேண்டும். மனிதரும் இயற்கையும் இணக்கமாக இருப்பதை பெரிதும் முன்னேற்ற வேண்டும். மூலவள சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நாட்டின் அடிப்படை கொள்கையில் ஊன்றி நிற்க வேண்டும். வெளிநாட்டுத் திறப்புக்கான புதிய அமைப்பு முறையை உருவாக்கி, பொருளாதாரத்தின் உலகமயமாக்க ஓட்டத்துக்கு ஏற்ப, வெளிநாட்டுத் திறப்பு நிலையை உயர்த்த வேண்டும். மக்களை மையமாக கொண்ட வளர்ச்சி சிந்தனையைச் செயல்படுத்தி, மக்கள் அனைவரும் கூட்டாக செல்வமடையும் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை ஷீ ச்சின்பிங் இக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்