ஆசிய நாகரிகத்தின் உலகச் செல்வாக்கு

ஜெயா 2019-05-16 11:35:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

15ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற ஆசிய நாகரிகத்தின் உலகச் செல்வாக்கு எனும் கிளை கருத்தரங்கில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் நாகரிகப் பரிமாற்றம் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அன்று நடைபெற்ற ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் துவக்க விழாவில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், பல்வகையான நாகரிகங்களுக்கு இடையில் பரிமாற்றம் தேவை. பரிமாற்றத்தால் ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும். படிப்பால், வளர்ச்சியைப் பெற முடியும் என்று கூறினார். உலகின் பல்வேறு நாடுகள், தேசிய இனங்கள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கிடையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். ஆசிய பொதுச் சமூகத்தையும், மனிதகுலத்தின் பொது சமூகத்தையும் கூட்டாக உருவாக்கும் மானிடவியல் அடிப்படையை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அவரது கருத்து இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள பல்வேறு பிரதிநிதிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. ஷிச்சின்பிங்கின் கருத்து பற்றி, கம்போடிய செய்தி அமைச்சர் கியூ கன்ஹரித் கூறுகையில், பல்வேறு நாகரிகங்களுக்கிடையில் புரிந்துணர்வை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம், சமமான மனப்பான்மையுடன் பிற நாகரிகங்களுடன் பழக முடியும் என்று கூறினார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சேங்யோங்நியான் கூறுகையில், ஒரு நாகரிகம் தன் உயிராற்றலை நிலைநிறுத்த வேண்டுமென்றால், அதற்கு பிற நாகரிகங்களுடனான பரிமாற்றம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். எதிர்காலத்தில், எந்த நாகரிகம் மேலும் திறந்ததாகவும் இணக்கமாகவும் இருக்கிறதோ, அந்த நாகரிகம் மட்டுமே மேலும் விரைவாகவும் சிறந்த நிலையிலும் வளரும் என்றும் அவர் கூறினார்.

அர்ஜென்டீனா கூட்டாட்சி பொது செய்தி ஊடக நிர்வாகப் பணியகத்தின் தலைவர் ஹர்நன் லொம்பார்டி பேசுகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாகரிகங்கள் சமமான நிலையில் பழகி கொள்ள வேண்டும். ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதோடு, பழைய கருத்தைக் கைவிட்டு, நாகரிகமான ஒத்துழைப்பு என்ற புதிய கருத்துடன் நடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்