ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாட்டின் சாதனைகள்

மோகன் 2019-05-25 16:09:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே 15ஆம் நாள், ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாடு பெய்ஜிங்கில் துவங்கியது. 47 ஆசிய நாடுகளையும் இதர நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் சேர்ந்த 1352 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் பல்வேறு தரப்புகளின் முயற்சியில், ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாட்டின் 2019 பெய்ஜிங் பொது கருத்து எனும் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், இம்மாநாட்டின் அடிப்படையில், ஆசியா உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் நாகரிகப் பரிமாற்றத்தை விரிவான முறையில் மேற்கொண்டு, ஆசிய நாகரிகம் உள்ளிட்ட உலக நாகரிகத்துக்கு தலைசிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அந்தப் பொதுக் கருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்மாநாட்டில் கலந்துகொண்ட சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. இதில் 4 முக்கிய வகைகளும் அவற்றின் கீழ் 26 பிரிவுகளும் உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்