இணையம்--அமெரிக்காவின் தனியார் உரிமை பிரதேசமா?

வாணி 2019-06-12 11:30:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இணைய வசதித்துறை ஏகபோகம், உலக்க் கண்காணிப்பு, பொதுவான இணையம் அமெரிக்காவின் தனியார் உரிமை பிரதேசமா? என்ற தலைப்பில் மக்கள் நாளேடு 12ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

சீன அரசு ஹுவாவெய், HIKVISION, SZ DJI ஆகிய சீன நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் வழி மறைமுகமாக உலகினைக் கண்காணித்து வருவதாக, அண்மைக்காலமாக அமெரிக்கா சீனாவின் மீது அவதூறு பரப்பி வருகின்றது. ஆனால், அதற்கான சான்றுகள் எதையும் இதுவரை அமெரிக்கா வெளியிடவில்லை. மாறாக உலகளவில் தொலைத் தொடர்புத் துறையில் அமெரிக்கா தனது முன்னேறிய தொழில் நுட்பங்களின் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டதற்கான சான்றுகள் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளன.

உலகில் 90 விழுக்காட்டுத் தொலைத் தொடர்புத் தகவல்களை அமெரிக்கா ஒற்று கேட்டு வருகிறது என்று மேலை நாடுகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்னோடன் வெளியிட்ட பிரிசம் திட்ட ஆவணத்தில் இதற்கான சான்றுகள் உள்ளன.

மேலும், ஏற்றுமதி செய்யப்படும் வழிச்செயலி,வழங்கி உள்ளிட்ட இணைய சாதனங்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பணியகம் மறைமுகக் கண்காணிப்புகளை நிறுவி, மீண்டும் பொதி செய்து முத்திரை செய்து சர்வதேச பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பியது என்று தெ காதியன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

2015ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாவின்படி, அமெரிக்கா தன் சொந்த நாட்டில் மேற்கொண்ட கண்காணிப்புத் திட்டப்பணிகளை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தொலைத் தொடர்புச் சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டுரிமையை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே அமெரிக்கா ஆதாரமின்றி சீன நிறுவனங்களின் மீது பழி கூறி வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்