விளையாட்டுத் துறையில் சீனாவின் வளர்ச்சித் திட்டம்

இலக்கியா 2019-09-03 10:40:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் சீன அரசவை அலுவலகம், விளையாட்டுத் துறை வல்லரசின் கட்டுமானப் பணித் திட்டத்தை வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, விளையாட்டுத் துறை வல்லரசின் கட்டுமானம், தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்படும். 2050ஆம் ஆண்டு வரை, பன்முகங்களிலும் சோஷலிச நவீன விளையாட்டு வல்லரசாக சீனா திகழும். சீன மக்களின் உடல் நலம், ஒட்டுமொத்த விளையாட்டு ஆற்றல், சர்வதேசச் செல்வாக்கு முதலியவை, உலகின் முன்னணியில் அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணித்திட்டத்தில், பொது மக்களின் உடல் பயிற்சி, இளைஞர்களின் விளையாட்டுக்கள், போட்டிசார் விளையாட்டுக்கள், விளையாட்டுத் தொழில், விளையாட்டுப் பண்பாடு, விளையாட்டுத் துறையில் வெளிநாட்டுப் பரிமாற்றம், ஹாங்காங் மக்கௌ தைவான் ஆகிய பிரதேசங்களுடன் விளையாட்டுத்துறை தொடர்பு முதலிய ஆறு துறைகள் குறித்து, திட்டவட்டமான இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டில் சீன விளையாட்டுத் தொழிலின் கூடுதல் மதிப்பு, 78 ஆயிரத்து 110 கோடி யுவானை எட்டியது. 2014ஆம் ஆண்டு முதல், 2017ஆம் ஆண்டு வரை, இத்தொழிலின் கூடுதல் மதிப்பின் ஆண்டு அதிகரிப்பு வேகம், 24.6 விழுக்காடாகும். இத்தொழில், மேலும் விரைவான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. விளையாட்டுத் துறை வல்லரசின் கட்டுமானப் பணித் திட்டப்படி, 2035ஆம் ஆண்டுக்குள், விளையாட்டுத் தொழில், தேசியப் பொருளாதாரத்தின் ஆதாரத் தூணாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, சீனத் தேசிய விளையாட்டுத் தலைமை பணியகத்தின் துணைத் தலைவர் லி ஜியென் மிங் கூறுகையில், விளையாட்டுத் தொழில், புதிதாக வளர்ந்து வரும் தொழிலாகும். புதிய உற்பத்திப் பொருட்கள், புதிய முன்மாதிரி முதலியவை தொடர்ந்து தென்பட்டு வரும் இத்துறையில் வளர்ச்சி வாய்ப்பும், தொடர வல்ல தன்மையும் உள்ளன. 2035ஆம் ஆண்டில் விளையாட்டுத் தொழிலின் மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4 விழுக்காடு வகிக்குமென மதிப்பீடு செய்கிறோம் என்று தெரிவித்தார்.

கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளை பரவலாக்க வேண்டும் என்பதும் இப்பணித்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பையை நடத்துவதற்கு விண்ணப்பம் செய்வது குறித்து, லி ஜியென் மிங் கூறுகையில், உலகக் கோப்பை நடத்த விண்ணப்பிப்பது, சீனக் கால்பந்து சீர்திருத்தத் திட்டத்தின் உறுதியான இலக்குகளில் ஒன்றாகும். ஆனால், விண்ணப்பிப்பது எப்போது என்பது, பல்வேறு நிலைமைக்கிணங்க ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து, முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்