சீன வெளிநாட்டு மொழிகள் வெளியீட்டு நிர்வாகம் உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு

பூங்கோதை 2019-09-04 17:35:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளிநாட்டு மொழிகள் வெளியீட்டு நிர்வாகம் உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார். சர்வதேசத் தகவல் பரிமாற்றப் பணியில் ஈடுப்பட்டு வருகின்ற பணியாளர்கள் அனைவருக்கும், இப்பணிக்கு ஆதரவு அளித்து வருகின்ற வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், புதிய நிலைமையில், உலகத்துடனான சீனாவின் தொடர்பு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. புதிய காலத்திலுள்ள சீனா பற்றி, சீன வெளிநாட்டு மொழிகள் வெளியீட்டு நிர்வாகம் உலகத்துக்கு மேலும் செவ்வனே அறிமுகம் செய்து, உலகம் சீனாவை அறிந்து கொள்வதற்கு மேலும் பெரும் புதிய பங்காற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்