சீனாவில் கையிருப்புத் தொகை விகிதம் குறைப்பு

வான்மதி 2019-09-07 16:57:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உண்மை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து, சமூக நிதித் திரட்டலுக்கான செலவைக் குறைக்கும் வகையில், சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி செப்டம்பர் 16ஆம் நாள், நிதி அமைப்புகளின் கையிருப்பு விகிதத்தை 0.5 புள்ளி குறைக்க உள்ளது. அதனுடன், குறு, சிறிய மற்றும் அரசுச் சாரா தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிக்கும் விதமாக, மாநில நிலை பிரதேசங்களுக்குள் இயங்கும் நகர வணிக வங்கிகளின் கையிருப்பு விகிதம் 1 புள்ளி குறைக்கப்படும். இந்தக் குறைப்பு, அக்டோபர் 15ஆம் நாள் 0.5 புள்ளி அளவும் நவம்பர் 15ஆம் நாள் 0.5 புள்ளி அளவுமாக நிறைவேற்றப்படும்.

சீன மத்திய வங்கியின் பொறுப்பாளர் ஒருவர் 6ஆம் நாள் இது பற்றி கூறுகையில், இந்த கையிருப்பு விகிதக் குறைப்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி யுவான் நீண்டகால நிதியிலிருந்து விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்