சீன-இந்திய ஆட்சி நிர்வாக ஆய்வுக்கூட்டம்

மோகன் 2019-09-09 16:30:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியாவின் கல்கத்தாவிலுள்ள சீனத் துணைத் தூதரகமும் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகமும் 6, 7 ஆகிய நாட்களில் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சீன-இந்திய ஆட்சி நிர்வாக ஆய்வுக்கூட்டத்தை கூட்டாக நடத்தின.

இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். சீன-இந்திய உறவு தலைசிறந்த வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி வருகின்றது. இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுறவில் மேலதிக நெருங்கிய வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இந்தியாவின் கல்கத்தாவிற்கான சீனத் துணைத் தூதர் ஷாலியொ தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டம் இரு நாட்டு எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமென இந்தியாவின் உலக விவகார கமிட்டியின் தலைவர் ராகவனும், விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சக்ரபர்தியும் விருப்பம் தெரிவித்தனர்.

சீன-இந்திய ஆட்சி நிர்வாக அனுபவம், இரு நாட்டு பொருளாதார வர்த்தக மற்றும் மானிடப் பண்பாட்டு பரிமாற்றம், தாகூரும் சீன-இந்திய உறவும் ஆகியவை இக்கூட்டத்தின் தலைப்பாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்