6வது சீன-இந்திய நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை

பூங்கோதை 2019-09-10 15:49:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

6வது சீன-இந்திய நெடுநோக்கு பொருளாதாரப் பேச்சுவார்த்தை மற்றும் சீன-இந்திய பொருளாதார ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் செப்டம்பர் 9ஆம் நாள் இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஹே லீஃபெங், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஆகிய இருவரும், இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தில், பல்வேறு பணிக்குழுகளின் முன்னேற்றங்களை இரு தரப்பும் தொகுத்து வழங்கின. மேலும், இரு நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைமை, இரு தரப்புகளின் பயன்தரும் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு, பொது கருத்துக்களை உருவாக்கியுள்ளன. சீனத் தரப்பு கூறுகையில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரே வளர்ச்சித் திசை உண்டு. இரு நாடுகளும் கைகோர்த்துக்கொண்டு ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து, ஆசியா மட்டுமல்லாமல், உலக அமைதி, நிலைப்புத் தன்மை மற்றும் செழுமைக்கும் பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சீனத் தொழில் நிறுவனங்கள் முதலீட்டு அளவை விரிவாக்குவதற்கு இந்திய தரப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், முன்னேறிய தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனத் தொழில் நிறுவனங்களின் அனுபவங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், தயாரிப்பு, சேவை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்