கூடுதல் சுங்க வரி விலக்குக்குரிய அமெரிக்கப் பொருட்கள்

மோகன் 2019-09-11 16:52:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா, கூடுதல் சுங்க வரியிலிருந்து முதல் சுற்று விலக்கு பெறுவதற்குரிய முதல் தொகுதி அமெரிக்கப் பொருட்களின் பெயர்ப்பட்டியலை செப்டம்பர் 11 ஆம் நாள் வெளியிட்டுள்ளது. இந்தப் பொருட்களுக்கான வரிவிலக்கு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் நடைமுறையில் இருக்கும். அமெரிக்கா வர்த்தக சர்ச்சையை கிளப்பிய பின், கூடுதல் சுங்க வரியிலிருந்து முதல் சுற்று விலக்கு பெறுவதற்குரிய பெயர்ப்பட்டியலைச் சீனா வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். சீனாவிலுள்ள தொழில்நிறுவனங்களுக்கான பாதிப்பை குறைப்பது என்பது இதன் முக்கிய நோக்கமாகும். சீனா கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் திங்களில், சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகச் சர்ச்சை மூண்ட பின், பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீனா மதிப்பிட்டு வருகின்றது. பல்வேறு நிதி கொள்கைகள் மூலம், நிறுவனங்களின் நெருக்குதலை குறைந்து வருகின்றது. இறக்குமதி கட்டமைப்பை மேம்படுத்துவது மூலம், நிறுவனங்களுக்கு உதவியை வழங்கி வருகின்றது.

அக்டோபர் திங்கள் துவக்கத்தில், 13ஆவது சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெறும் என்று இரு தரப்பும் தீர்மானித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்