ஷிச்சின்பிங் ஹோ லாட் செங் சந்திப்பு

மோகன் 2019-09-11 18:52:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 11ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரி ஹோ லாட் செங்கைச் சந்தித்துரையாடினார்.

சீனாவின் வளர்ச்சி நெடுநோக்கு மற்றும் மக்கௌ யதார்த்த நிலைமையின் படி, ஹோ லாட் செங், மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் புதிய அரசுடனும், பல்வேறு சமூக வட்டாரங்களுடனும் இணைந்து, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையில் பெற்ற சாதனைகளை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டுமென ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் மற்றும் நடுவண் அரசின் தலைமையில், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை உறுதியாக செயல்படுத்தி, அரசியல் அமைப்புச் சட்டத்தையும் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அடிப்படைச் சட்டத்தையும் பின்பற்றி, சீன நடுவண் அரசின் பன்முக நிர்வாக அதிகாரத்தைப் பேணிக்காத்து, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் நடைமுறையாக்கத்தைத் தூண்ட விரும்புவதாக ஹோலாட்செங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்