சின்ஜியாங் மற்றும் ஹாங்காங் பற்றி சீனாவின் நிலைப்பாட்டுக்கு பன்னாடுகளின் ஆதரவு

ஜெயா 2019-09-12 09:39:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் நாட்களில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 42ஆவது கூட்டத்தில், கலந்து கொண்ட பன்னாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது உரையில் சின்ஜியாங்கின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்தடுப்பின் சாதனைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், ஹாங்காங்கில் ஆர்பாட்டம் நடத்தியவர்கள் வன்முறைச் செயல்களை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள், ஹாங்காங் விவகாரத்தில் வெளிப்புற சக்திகளின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..

ஜெனீவாவிலுள்ள ஏமனின் நிரந்தர பிரதிநிதி அழைப்பின் பேரில் சின்ஜியாங்கின் தொழில் திறன் கல்வி மற்றும் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டார். கல்வி, வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முதலிய துறைகளில் சீனாவின் முயற்சிகளுக்கும், குறிப்பாக சின்ஜியாங்கில் சீனா பெற்றுள்ள சாதனைகளுக்கும் ஏமன் பாராட்டு தெரிவித்ததாக ஏமன் பிரதிநிதி தெரிவித்தார்.

ஹாங்காங் மற்றும் சின்ஜியாங் விவகாரங்கள் சீனாவின் உள்விவகாரங்களாகும். எந்த வெளிப்புறச் சக்திகளும் இதில் தலையிடக் கூடாது. சர்வதேச சமூகத்தில் முன் எப்போதும் கண்டிராத திறந்த மற்றும் நேர்மையான மனப்பாங்கை சீனா வெளிக்காட்டியுள்ளது என்று பெலாரஸ் பிரதிநிதி கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்