ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம்

சரஸ்வதி 2019-09-12 09:41:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தலிபானுடனான ரகசியமான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அறிவித்த பிறகு, ஆப்கானிஸ்தானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகியுள்ளது.

தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம் திணிக்கும் அதேவேளையில், ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு இராணுவ ஆதரவுகளை வழங்கும் என்று தலிபானுடனான அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக இடை நீக்கம் செய்த பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ தெரிவித்தார்.

வாக்குறுதியை மீறிய டிரம்பின் மீது தலிபான் குற்றஞ்சாட்டியது. மேலதிகமான அமெரிக்க மக்கள் தங்கள் உயிரை இதற்கான விலையாக கொடுக்க நேரிடும் என தலிபான் எச்சரித்துள்ளது. 11ஆம் நாள் விடியற்காலையில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரகம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அருகில் ராக்கெட்டுக் குண்டு ஒன்று வெடித்தது. நல்ல வேளையாக, இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

அதே நாள், வட ஆப்கானிஸ்தானிலுள்ள அரசுப் படை மற்றும் தலிபானுக்கிடையில் சண்டை தொடர்ந்து தீவிரமாகியுள்ளது. குறைந்தது 10 மாநிலங்களில் சண்டை நிகழ்ந்தது. டாக்ஹார் பாக்லான், குன்துஸ், படஹ்ஷன் முதலிய மாநிலங்களில் கடும் மோதல் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்