சீனப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டுவது புத்தாக்கம்

இலக்கியா 2019-09-17 18:46:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக வங்கி, சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம், சீன நிதி அமைச்சகம் ஆகியவை 17ஆம் நாள், “புத்தாக்கச் சீனா:சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தி ”என்ற தலைப்பிலான அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன. சீனாவில் புதிய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. புத்தாக்க ஆற்றலும் வேகமாக வலுவடைந்து வருகிறது என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

புள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்திக் குறியீட்டு எண் 270.3ஐ எட்டியது. அது 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட 28.7 விழுக்காடு அதிகம். தற்போது, உலகப் புத்தாக்கக் குறியீட்டுக்கான வரிசையில் 2011ஆம் ஆண்டில் இருந்த 29ஆம் இடத்திலிருந்து, 2018இல் 17ஆம் இடத்துக்கு சீனா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்