சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் ஹேனான் சோதனை பயணம்

கலைமணி 2019-09-19 14:37:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின் பிங், செப்டம்பர் 16 முதல் 18ஆம் நாள் வரை, ஹேனான் மாநிலத்தின் சின் யாங், செஹ் சோ ஆகிய நகரங்களில், பொருளாதார சமூக வளர்ச்சி நிலைமை பற்றியும், தொடக்க கால நம்பிக்கையை நினைவு கூர்தல் என்ற கல்வி நடவடிக்கை நடைமுறையாக்கம் பற்றியும் சோதனை பயணம் மேற்கொண்டார். நிதானமான பணி முறையிலும், புதிய வளர்ச்சிக் கருத்திலும் ஊன்றி நின்று, பொருளாதார வளர்ச்சியையும் சமூக நிதானத்தையும் முன்னேற்றி, பொது மக்களின் இன்பமான உணர்வை அதிகரித்து, புதிய காலத்தில் ஹேனான் மாநிலத்தின் செழுமையை உருவாக்க வேண்டும் என்பதை ஷி ச்சின் பிங் வலியுறுத்தினார்.

16ஆம் நாள் மாலை, ஷி ச்சின் பிங், ஹு பெய், ஹேனான், அன் ஹுய், ஜியாங் சூ ஆகிய மாநிலங்களின் கூட்டு தியாகிகள் நினைவிடத்திற்குச் சென்று உரையாற்றினார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவின் போது, தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் வகையிலேயே இந்நினைவிடத்தில் பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாக, பாரம்பரியமிக்க தனிச்சிறப்புடைய, சுற்றுலா மூலவளங்களைப் பயன்படுத்தி, விவசாயிகளை வறுமையிலிருந்து விலகச் செய்துள்ள சின் மாவட்டத்தின் டியன் பூ வட்டத்தின் டியன் பூ தா வன் என்ற ஊரில் சோதனைப் பயணம் மேற்கொண்ட ஷி ச்சின் பிங், உள்ளூர் நிலைமையின் படி, பாரம்பரிய மிக்க ஊரைச் சரியாக பாதுகாத்து, சுற்றுலா துறையை சீராக வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

செங் சோ நிலக்கரி சுரங்க இயந்திர குழுமம், சீனாவின் உயர் புதிய தொழில் நட்பம் கொண்ட தொழில் நிறுவனமாகும். ஆக்க தொழில், சீனாவின் உண்மைப் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். உண்மைப் பொருளாதாரம், சீன வளர்ச்சியின் அடிப்படையாகும். எதிர்கால வளர்ச்சி நெடுநோக்கை வகுக்கும் முக்கியத் தூணாகும் என்று 17ஆம் நாள் அங்கே சோதனை பயணம் மேற்கொண்ட போது ஷி ச்சின் பிங் வலியுறுத்தினார்.

17ஆம் நாள் மாலை, ஷி ச்சின் பிங், மஞ்சள் ஆற்றின் கண்காட்சியகத்தைப் பார்வையிட்டு, மஞ்சள் ஆற்றுப்ள்ளத்தாக்கின் நாகரிக வளர்ச்சி, வெள்ளபெருக்குக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சோஷலிச அமைப்பு முறையின் மேம்பாட்டைப் வெளிக்கொணர்ந்து, மஞ்சள் ஆற்றைச் சீராக நிர்வகித்து, 3 ஆண்டுகாலத்தில் இரு முறை நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு நிலைமையை மாற்ற முடியும் என்று ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்