இலங்கைக்கு பாதுகாப்பு சாதனப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் சீனா

கலைமணி 2019-09-28 15:15:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா, இலங்கைக்கு பாதுகாப்பு சாதனப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் விழா 27ஆம் நாள் இலங்கை அரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இலங்கை அரசுத் தலைவர் சிரிசேனா, தேசியப் பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர செயலாளர் கோட்தியேகோ, இலங்கைக்கான சீனத் தூதர் ச்செங் சுயே யுவான் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ச்செங் சுயே யுவான், சீன அரசின் சார்பாக, இலங்கை அரசிடம் இந்தப் பொருட்களை ஒப்படைத்தார். சகோதர உறவுடன் இலங்கையுடன் நட்பு பாராட்டி வரும் சீனா, இலங்கையின் கவலையில் கவனம் செலுத்தி, முயற்சியுடன், பல்வேறு துறைகளில் இலங்கை அரசுக்கு ஆதரவும் உதவியும் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் நடைபெற்ற பயங்கரவாத்த் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு ஆக்கப்பணியை வலுப்படுத்துவது குறித்து, இலங்கை சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தது. இலங்கையின் கோரிக்கைக்குச் சீனா, ஆக்கபூர்வமாக பதில் அளித்துள்ளது. இதற்காக இலங்கை அரசும் காவற்துறையும் நன்றி தெரிவித்துகொள்கின்றன என்று இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சின் நிர்ந்தர செலயாளர் கோத்தியேகோ கூறினார்.

இப்படத்திலுள்ள கருவியின் வேலை என்ன? உங்களுக்கு தெரியுமா?


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்