சீனாவின் உயர் நிலை சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி

கலைமணி 2019-10-03 15:55:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போ சோஃபியா, சாதாரண கம்போடிய பெண். 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. தற்போது அவர், சொந்த வீட்டையும் மோட்டர் சைக்கிளையும், வாங்கியுள்ளார். தன் இரு குழந்தைகளின் படிப்புக் கட்டணத்தை செலுத்தி வருகிறார். அவரின் வாழ்க்கை தரம் பெருமளவில் மேம்பட்டுள்ளது. அவருக்கு, சிஹானுக் துறைமுகத்திலுள்ள சீனத் தொழில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்ததே, இதற்கான காரணமாகும். 2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிஹனுக் துறைமுகம் சிறப்பு மண்டலம் சீன-கம்போடிய இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களைக் கூட்டாக முதலீடு செய்து, சீன தொழில் நிறுவனங்கள் முக்கியமாக்க் கொண்ட பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மண்டலமாகும். அதோடு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, உலகுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டதற்குரிய மாதிரியாகவும் இது விளங்குகின்றது.

70 ஆண்டுகளுக்கு முன்பு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட போது, பொது மக்களின் வாழ்க்கை மிகச் சிக்கலாக இருந்தது. சீனாவின் தொழிற்துறை மற்றும் வேளாண் துறையின் அடிப்படை வலிமையற்றிருந்தது. கடினமாக வேலை செய்யும் சீன மக்கள், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைப் பயன்படுத்தி, கடந்த 70 ஆண்டுகாலத்தில் உலகில் கண்டிராத மாபெரும் வளர்ச்சியை உருவாக்கியுள்ளனர். சென் ச்சென் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, கடலோர, எல்லை, ஆற்று இருகரை, உள் பகுதி ஆகிய பகுதிகளில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொண்டு, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை முன்மொழிந்து, தாராள வர்த்தக மண்டலங்களை அமைத்து, சீன தனிச்சிறப்புடைய தாராள வர்த்தக துறைமுகத்தை உருவாக்கி, உலகில் இறக்குமதியை மையமாகக் கொண்ட சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியை நடத்திய சீனா, வெளிநாட்டுத் திறப்புப் பணியை படிப்படியாக விரிவாக்கி, உலகுடனான தொடர்பை இடைவிடாமல் அதிகரித்துள்ளது.

70 ஆண்டுகாலத்தில், சீனா பாய்ச்சல் வளர்ச்சியை நனவாக்கி, உலகின் 2ஆவது பெரிய பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது.

சீனா தொடர்ந்து விரிவாக்கிய திறப்புப் பணி, உலகிற்கு நலன் தந்துள்ளது. 2006ஆம் ஆண்டுக்கு பிறகு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா ஆற்றிய பங்கு, தொடர்ந்து முதலிடத்தில் வகித்து வருகின்றது. சீனா திறப்புப் பணியை விரிவாக்குவதன் வழி, உலகிற்கும் வாய்ப்பு தந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் இயக்குநர் லெகார்தே அம்மையார் கருத்து தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகாலத்தில் சீனா முயற்சி செய்து, குறிப்பாக சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொண்ட பிறகு, எட்டியுள்ள சாதனைகள், வளரும் நாடுகளுக்கு அனுபவங்களை வினியோகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்