சீனா வறுமை ஒழிக்கும் வழிமுறையின் பங்கு

கலைமணி 2019-10-04 15:13:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவ சீனா நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவின் போது, 90 வயதான சீன வேளாண் துறையின் புகழ் பெற்ற அறிவியலாளரும் பேராசிரியருமான யுவன் லுங் பிங் தேசிய மதிப்புறு பதக்கத்தை பெற்றார். நீண்டகாலத்தில் கலப்பு நெல் ஆய்வு பரவல் பணியில் கலந்துகொண்ட அவர், சீனாவின் தானிய பாதுகாப்புக்கும் உலக தானிய வினியோகத்திற்கும் நிறைய பங்கு ஆற்றியுள்ளார். அவர் முழு ஆயுளில் பங்காற்றிய இலட்சியம், சீன வறுமை ஒழிப்பு மற்றும் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முக்கிய சின்னமாக கருதப்பட்டு வருகின்றது.

நவ சீனா நிறுவப்பட்ட போது, உலகில் மிக வறுமையான நாடாக திகழ்ந்தது. அப்போதைய சீன மக்களுக்கு போதுமா அளவு உணவுகளும் ஆடைகளும் கிடைக்க வில்லை. சொந்த முயற்சி மற்றும் கடினமான உழைப்பின் மூலம், குறிப்பாக யுவன் லுங் பிங்கின் கலப்பு நெல் நுட்பம் வெற்றி பெற்ற பிறகு, சீனாவின் உணவு பிரச்சினை தீர்க்கப்பட்டது. சீனா, உலகில் 9 விழுக்காடான விளைநிலத்தைப் பயன்படுத்தி, உலகின் 20 விழுக்காடான மக்களுக்கு போதுமான அளவு உணவை வினியோகித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் தானிய உற்பத்தியளவு உலகளவில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளை, சீனாவின் வறுமை ஒழிப்புப் பணியும் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், சீனாவில் 85 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 2013 முதல் 2018ஆம் ஆண்டுக்கு வரை, ஒவ்வொரு ஆண்டில் ஒரு கோடியே 20 இலட்சம் சீனர்கள், வறுமையிலிருந்து விடுபட்டனர். இவை உலக வறுமை ஒழிப்பு பணியில் 70 விழுக்காடு பங்காற்றியுள்ளன.

உலகில் மிக பெரிய வளரும் நாடாக, சீனா, கடந்த 70 ஆண்டுகளில், வறுமை ஒழிப்புப் பணியின் சாதனை, உலக வறுமை ஒழிப்புப் பணிக்கு நிறைய பங்காற்றியுள்ளது. ஐ.நாவின் வறுமை ஒழிப்பு இலக்கை சீனா முதலாக நிறைவேற்றியது. இது மட்டுமல்ல, சீனா முயற்சியுடன், ஆசிய ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு அரசியல் நிர்பந்தங்கள் இல்லாத உதவியை அளித்துள்ளது. 70 ஆண்டுகாலத்தில், சீனா, 170 நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் 40 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள உதவி அளித்து, 6 இலட்சம் உதவி பணியாளர்களை அனுப்பியுள்ளது. இக்காலத்தில் சீனா, 5000க்கு மேலான உதவி திட்டப்பணிகளை நிறைவேற்றி, வளரும் நாடுகளின் ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு அதிகமான உதவி பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இவை எல்லாம் பெரிய நாடான சீனாவின் பொறுப்பு தான்.

வறுமை ஒழிப்பு வழிமுறையும் அனுப்பவங்களையும் கொண்டு, உலக வறுமை ஒழுப்பு இலட்சியத்திற்கு சீனா பல்வேறு திட்டத்தையும் அறிவுரையையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்