​ஷிச்சின்பிங்கின் தெற்காசியப் பயணம்:சீன வெளியுறவு அமைச்சகம்

தேன்மொழி 2019-10-09 18:49:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

(வூகான் நகரில்)

இந்தியாவின் சென்னையில் சீன-இந்திய தலைவர்களின் 2ஆவது அதிகாரப்பூர்வமற்றச் சந்திப்பு நடைபெற உள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இந்தியப் பயணம் குறித்து, துணை வெளியுறவு அமைச்சர் லோ சாவ் ஹுய் 9-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்,அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் கைகோர்த்து ஒத்துழைத்து, கூட்டாக வளர்வது என்பது, உலக பலத்துருவமயமாக்கம் மற்றும் பொருளாதார உலகமயமாக்கத்தின் போக்கை முன்னேற்றுவிக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிக்காக்கத் துணைபுரியும் என்று தெரிவித்தார்.

ஷிச்சின்பிங்கின் நேபாளப் பயணம் தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பில் முக்கியக் கூட்டாளியாக நேபாளம் உள்ளது. இரு நாடுகளின் தலைவர்களும், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதியத் திட்டத்தை வகுக்க உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்