​நேபாள நாட்டுடனான உறவை புதிய நிலைக்கு முன்னெடுக்க விரும்புகிறேன்: ஷிச்சின்பிங்

2019-10-13 14:29:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், நேபாள அரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரியும் அக்டோபர் 12ஆம் நாள் காத்மாண்டுவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான நிரந்தர நட்பைக் கொண்ட நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவை உருவாக்க சீனாவும் நேபாளமும் முடிவெடுத்துள்ளதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.

அப்போது ஷிச்சின்பிங் கூறியதாவது

மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட்டு வரும் சீனாவும் நேபாளமும் அண்டை நாட்டு உறவை வளர்ப்பதில் ஒரு உதாரணமாகத் திகழும். இந்தப் பயணத்தின் மூலம், பழைய நட்புறவைத் தொடர்ந்து, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, இரு நாட்டுறவை புதிய நிலைக்கு முன்னெடுக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேபாளத்தில் பயணம் மேற்கொள்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவின் உருவாக்கமானது, நேபாள- சீன உறவை புதிய யுகத்திற்கு முன்னெடுத்து செல்லும் என்று பண்டாரி கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்