செழிப்பான நேபாளம், மகிழ்ச்சியான நேபாளர் என்ற அருமையான காட்சியை நனவாக்குவதில் நேபாளத்திற்கு சீனா ஆதரவு: ஷிச்சின்பிங்

மதியழகன் 2019-10-13 17:10:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், நேபாள தலைமை அமைச்சர் கே.பி. சர்மா ஓலியும் அக்டோபர் 13ஆம் நாள் காத்மாண்டுவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொருளாதாரத்தை வளர்த்து, மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, “செழிப்பான நேபாளம் மகிழ்ச்சியான நேபாளர்” என்ற அருமையான காட்சியை நனவாக்கி வரும் நேபாளத்திற்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக, நேபாளத்துடன் கொள்கைத் தொடர்பை வலுப்படுத்தி, ஆட்சித் திறமை தொடர்பான ஒத்துழைப்பு மேற்கொண்டு, கல்வி, சுற்றுலா உள்ளிட்டத் துறைகளிலான பரிமாற்றத்தை அதிகரிக்க சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் கூறினார்.

நேபாளமும் சீனாவும், உண்மையான நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் விளங்கும். வெளிப்புறத்தில் எந்த விதமான மாற்றமும் இருந்தாலும், சீனாவுக்கான நேபாளத்தின் நல் உறவுக் கொள்கை மாறாது என்று சர்மா ஓலி தெரிவித்தார். மேலும், சீனா-நேபாளம் கூட்டறிக்கையை இரு தரப்பும் இணைந்து வெளியிட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்