​ஷிச்சின்பிங் தெற்காசியப் பயணம்:சீன வெளியுறவு அமைச்சர்

தேன்மொழி 2019-10-14 09:51:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 11-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தியாவில் நடைபெற்ற இந்திய-சீன தலைவர்களின் 2ஆவது முறைசாரா சந்திப்பில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து நேபாளத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இவ்விரு பயணங்கள் குறித்து சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ விளக்கிக் கூறினார். சீன அரசுத் தலைவரின் இப்பயணம், சீன-இந்திய உறவுக்கும் சீன-நேபாள உறவுக்கும் புதிய இயக்காற்றலைக் கொண்டு வந்துள்ளது. இது தெற்காசியாவின் அண்டை நாட்டு உறவுக்கு புதிய மேடையை உருவாக்கியுள்ளதோடு, பிரதேசத்தின் பயனுள்ள ஒத்துழைப்புக்கு வாய்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் இணைந்து, இந்திய நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றுச்சிறப்பு மிக்க மாமல்லபுரத்தின் ஐந்து ரதங்களை ஷிச்சின்பிங் பார்வையிட்டார். இரு நாடுகளின் பழமையான நாகரிகங்கள், தற்போது உலகில் நிலவுகின்ற பல்வேறு அறைகூவல்களைச் சமாளிக்க ஆலோசனை வழங்க முடியும் என இரு தலைவர்களும் கருதுகின்றனர் என்று வாங் யீ தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்