சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியைச் சுற்றி பார்வையிட்ட ஷிச்சின்பிங்

தேன்மொழி 2019-11-05 18:32:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5-ஆம் நாள் ஷாங்காங்கில் நடைபெற்று வரும் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, துவக்க விழாவில் கலந்துகொண்டுள்ள பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடன் சேர்ந்து, அவர் பொருட்காட்சி நடைபெறும் அரங்கினைப் பார்வையிட்டார்.

தான்சானியாவின் முந்திரி, கிரேக்கத்தின் உணவுப்பொருட்கள், இத்தாலியின் திராட்சை மது, ஜமைக்காவின் காஃபி, ரஷியாவின் புதிய ரக ஹெலிகப்படர் உள்ளிட்ட வணிகப் பொருட்களை ஷிச்சின்பிங் கண்டு ரசித்தார்.

பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் நட்பார்ந்த முறையில் உரையாடிய ஷிச்சின்பிங், பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்புடைய வணிகப் பொருட்கள் போட்டி ஆற்றல் மிக்கவை என்று தெரிவித்தார். மேலும், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பங்கெடுக்கும் பல்வேறு நாடுகளை வரவேற்ற அவர், ஒன்றுக்கொன்று நலன் தரும் கூட்டு வெற்றி நனவாக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்