​சீன-பிரெஞ்சு அரசுத் தலைவர்களின் மனைவிகள் ஷாங்காய் பயணம்

தேன்மொழி 2019-11-05 19:18:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லீ யுவன், பிரான்ஸ் அரசுத் தலைவரின் மனைவி பிரிகிட் ஆகியோர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரிலுள்ள அன்னிய மொழி பள்ளிக்கூடத்தைக் கூட்டாக பார்வையிட்டனர்.

இப்பள்ளியில் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்கள் இரு நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுக்கு சீன மற்றும் பிரெஞ்சு தனிச்சிறப்புடைய கலைநிகழ்ச்சியை அரங்கேற்றினர். அதைத் தொடர்ந்து பெங் லீ யுவன் கூறுகையில், இரு நாட்டு இளைஞர்கள் பரிமாற்றம் மற்றும் கற்றுகொள்ளுதல் மூலம் ஆழ்ந்த முறையில் இரு நாட்டு பண்பாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். பிரிகிட் கூறுகையில், இரு நாட்டு இளைஞர்களுக்கிடையே மேலும் அதிகமான பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமென ஊக்கமளித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்