ரஷிய-இந்திய இராணுவத் தொழில் நுட்ப ஒத்துழைப்பு

ஜெயா 2019-11-07 09:55:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு இராணுவத் தொழில் நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்கள் தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ரஷியத் துணைத் தலைமையமைச்சர் பொரிசோவ் 6ஆம் நாள் கூறினார்.

அன்று, அவர், ரஷியாவில் பயணம் மேற்கொண்ட இந்திய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங்கை மாஸ்கோவில் சந்தித்தார். அப்போது அவர்கள் இரு தரப்பு ராணுவத் தொழில் நுட்பம், அறிவியல், உயர்நிலை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு பற்றி விவாதித்தனர்.

இராஜ்நாத் சிங் கூறுகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு அளிக்கும் நிர்பந்தத்தைச் சகித்துக் கொள்ளும் அதே வேளை, நாங்கள் ரஷியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்ள விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்