வெளிநாட்டு முதலீட்டுக்குத் துணைபுரியும் சீனாவின் 20 நடவடிக்கைகள்

வான்மதி 2019-11-08 16:48:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டு முதலீட்டைப் பயன்படுத்தும் பணியை செவ்வனே மேற்கொள்வதற்கான கருத்து ஆவணத்தைச் சீன அரசவை 7ஆம் நாள் வெளியிட்டது. இந்த ஆவணத்தில் வெளிநாட்டுத் திறப்பை ஆழமாக்குவது, முதலீட்டை ஊக்குவிக்கும் அளவை அதிகரிப்பது, முதலீட்டின் வசதிமயமாக்கச் சீர்திருத்தத்தை வலுப்படுத்துவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பது ஆகிய 4 துறைகள் தொடர்பான 20 நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சீனாவின் திறப்பு நிலை உயர்த்தப்படுவதோடு, சீனாவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொழில் புரிவதற்கான சிறந்த சூழல் உருவாக்கப்படும்.

இந்த கருத்து ஆவணம், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டின் பயன்பாடு தொடர்பாக சீன அரசவையால் வெளியிடப்பட்ட 4ஆவது ஆவணமாகும். இது, அடுத்த ஆண்டு மற்றும் எதிர்வரும் காலத்தில் வெளிநாட்டு முதலீட்டின் பயன்பாட்டுக்குரிய வழிகாட்டலாக அமையும். மேலும், வெளிநாட்டு முதலீட்டுச் சட்டம் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் நடைமுறைக்கு வந்த பிறகு, பல்வேறு இடங்கள் மற்றும் வாரியங்கள் இச்சட்டத்தை கண்டிப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் இவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்