சீன விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு

மோகன் 2019-11-09 16:43:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன விமான படை உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 8ஆம் நாள் தொடர்புடைய கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்துகொண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் சார்பில், சீன விமான படை உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, முழு விமான படை அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் உளமார்ந்த வணக்கத்தை தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டு காலத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், விமான படை அதிகாரிகளும் படைவீரர்களும் படை ஆக்கப்பணியில் தலைசிறந்த சாதனைகளைப் பெற்று, தேசிய அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் மதிப்புள்ள பங்காற்றியுள்ளனர் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்