சீன-கிரேக்க நாட்டின் கூட்டுப் பிரேயஸ் துறைமுகத் திட்டப்பணி

சிவகாமி 2019-11-12 11:22:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் 11ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி, கிரேக்கத் தலைமையமைச்சர் மிட்சோடகிஸ் மற்றும் மனைவி ஆகியோர், இரு தரப்பு ஒத்துழைப்புக்கு முன்மாதிரி திட்டப்பணியான பிரேயஸ் துறைமுகத்தைக் கூட்டாக பார்வையிட்டனர்.

சீன கடல் போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாகத்திலுள்ள இத்துறைமுகத்தின் செயல் மற்றும் வளர்ச்சித் திட்டம் பற்றிய அறிமுகத்தை அவர்கள் கூட்டாகக் கேட்டறிந்தனர்.

சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முழுக்கம் அல்ல. அது வெற்றிகரமான தலைசிறந்த நடைமுறையாகும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

கிரேக்கம், கடன் நெருக்கடியில் சிக்கிய போது, கிரேக்க மக்களுக்குச் சீன உதவியளித்தது. பிரேயஸ் துறைமுகத் திட்டப்பணி ஒன்றுக்கு ஒன்று சலுகை மற்றும் நலன் தரக் கூடிய திட்டப்பணியாகும் என்று மிட்சோடகிஸ் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்