பிரேசிலியாவில் ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு

பூங்கோதை 2019-11-14 10:12:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் நவம்பர் 13ஆம் நாள் பிரேசிலியாவில் சந்திப்பு நடத்தினார்.

அப்போது ஷி ச்சின்பிங் பேசுகையில், சென்னையில் நாம் நடத்திய சந்திப்பில் உருவாக்கப்பட்ட பொது கருத்துக்களை, இரு நாடுகளின் தொடர்புடைய வாரியங்கள் செயல்படுத்தி வருகின்றன. கடந்த வாரத்தில், 2வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் கௌரவ விருந்தினராக,கலந்து கொண்ட இந்தியாவின் வர்த்தக பரிவர்த்தனைத் தொகை முதலாவது பொருட்காட்சியில் இருந்ததை விட, பெருமளவில் அதிகரித்துள்ளது. உற்பத்தி திறன், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில், இரு தரப்பும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், 2020ஆம் ஆண்டு, சீன-இந்திய மனித தொடர்பு பரிமாற்ற ஆண்டாகவும், சீன-இந்திய தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகவும் திகழ்கிறது. இந்த இரு கொண்டாட்ட நிகழ்ச்சிகளைச் செவ்வனே நடத்தி, பொது மக்களுக்கிடையிலான நப்புறவை முன்னேற்ற வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, சீனாவும் இந்தியாவும், இரு நாட்டுறவின் வளர்ச்சித் திசையைச் சரிப்படுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கட்டுப்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை மேலும் முன்னேற்ற விரும்புவதாக கூறினார்.

மோடி பேசுகையில், சீனாவின் வூஹான், இந்தியாவின் சென்னை ஆகிய நகரங்களில் நாம் சந்திப்பு நடத்தி, ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை மற்றும் நட்புறவை ஆழமாக்கியுள்ளோம். உங்களுடன் இணைந்து, நெருங்கிய தொடர்புகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கட்டுப்படுத்தி, இரு நாட்டுறவு மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்