அமெரிக்காவின் மேலாதிக்கவாதத்தை ஒழிக்க வேண்டும்

கலைமணி 2019-11-30 19:33:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா, சீனாவின் கடுமையான எதிரப்பில் கவனம் செலுத்தாமல், அண்மையில், மனித உரிமைப் பாதுகாப்பு என்னும் பெயரில், கூறப்படும் ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவை அதிகாரப்பூர்வான சட்டமாக அங்கீகரித்துள்ளது. இது சர்வதேச மேடையில், அமெரிக்காவின் மேலாதிக்கவாதத்தையும் வல்லரசு அரசியலையும் வெளிக்காட்டியது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையை, சீன அரசு மற்றும் பொது மக்கள் மட்டுமல்லாது, சர்வதேச சமூகமும் பெருமளவில் குற்றஞ்சாட்டின.

மேலாதிக்கவாதமும் வல்லரசு அரசியலும் அமெரிக்க தூதாண்மை கொள்கையின் முக்கிய வழிமுறையாகும். நீண்டகாலமாக, அமெரிக்கா, தனது வலிமைமிக்க தேசிய ஆற்றலைத் தவறாக பயன்படுத்தி, சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளையும் மீறி, ஐ.நாவின் தீர்மானங்களில் கவனம் செலுத்தாமல், போரை ஏற்படுத்தி, உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து வருகின்றது.

ஹாங்காங் பிரச்சினையில் அமெரிக்கா தொடர்ச்சியான தலையீடு, இரு நாட்டுறவையும் முக்கிய துறைகளிலான ஒத்துழைப்பையும் பாதிக்கும். இது தொடர்பாக சீனா மேற்கொள்ளும் பதில் நடவடிக்கைகளுக்கும், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்