சீனாவின் புதிய உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கத்துக்கான விதிமுறை

ஜெயா 2019-12-02 14:50:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிதாக திருத்தப்பட்ட சீனாவின் உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கத்துக்கான விதிமுறை இந்த திங்கள் முதல் அதிகாரப்பூர்வமாகச் நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தில், மிக்க் கடுமையான வரையறை, கண்காணிப்பு, தண்டனை, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனையை இது உறுதிப்படுத்துகிறது.

வேண்டுமென்றே சட்டத்தை மீறி, மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும் செயலில் ஈடுபடும் தொழில் நிறுவனத்துக்கு தண்டனை கொடுக்கும் போது, தொழில் நிறுவனத்தின் சட்டப் பிரதிநிதி, முக்கியமான பொறுப்பாளர், நேரடிப் பொறுப்பாளர்கள் முதலியோருக்கு இச்சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும். மிக அதிக அபராதத் தொகையாக, கடந்த ஓராண்டில் கிடைத்த வருமானத்தை விட 10 மடங்கு இருக்கும் என்று சீனத் தேசிய சந்தை ஒழுங்கு துணைத் தலைவர் சுன்மேஜுன் அம்மையார் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்