ஷிச்சின்பிங்-பத்ருஷேவ் சந்திப்பு

மோகன் 2019-12-02 18:41:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய சட்ட அமலாக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு முறை கூட்டத்திலும், சீன-ரஷிய நெடுவோக்கு பாதுகாப்புக் கலந்தாய்விலும் கலந்துக்கொண்ட ரஷிய கூட்டாட்சி பாதுகாப்புப்பேரவையின் தலைமைச் செயலாளர் நிகோலய் பத்ருஷேவைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.

சிக்கலான சர்வதேச நிலைமையில், சீனாவும் ரஷியாவும் நெருக்கமாக ஒன்றுபட்டு, நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

ரஷிய-சீன உறவு சீர்குலைக்கப்பட முடியாத ஒன்று. அமெரிக்காவின் நடவடிக்கைகள் ரஷிய-சீன நலனுக்கு ஊறு விளைவித்து, சர்வதேச முறைமைக்கும் ஒழுங்கிற்கும் கடுமையான பாதிப்பை வழங்கியுள்ளன என்று பத்ருஷேவ் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்