அமெரிக்காவின் தவறான நடவடிக்கைக்குச் சீன மக்களின் கண்டனம்

கலைமணி 2019-12-02 18:50:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசை எதிர்த்து, ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அண்மையில், அமெரிக்க அரசு, ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவை சட்டமாக மாற்றியுள்ளது. இது, ஹாங்காங் பொது மக்களின் மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை மிதிக்கும் செயலாகும். ஹாங்காங்கில் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தி, சீன வளர்ச்சியைப் பாதிக்கும் அமெரிக்காவின் நோக்கம் மோசமானது. ஹாங்காங்கில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளுக்கு ஹாங்காங் மக்கள் உள்ளிட்ட 140 கோடி சீன மக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்மொழிவு, மனித உரிமை மற்றும் ஜனநாயக என்ற பெயரைப் பயன்படுத்தி, ஹாங்காங் பொது மக்களின் மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் நசுக்கும் ஒன்றாகும். 75 இலட்சம் ஹாங்காங் மக்களை எதிரியாகக் கருதும் நடவடிக்கை இதுவாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்