சீனாவின் உயர் தரமுள்ள வர்த்தக வளர்ச்சி

பூங்கோதை 2019-12-03 14:04:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உயர் தரமுள்ள வர்த்தக வளர்ச்சிக்கான வழிகாட்டல் என்னும் ஆவணத்தைச் சீனா அண்மையில் வெளியிட்டது. வர்த்தகத் துறையில் பெரிய நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறுவதற்கு இது வழிவகுக்கும்.

முன்பை விட மேலும் சரிசமமான வர்த்தக அமைப்புமுறையைச் சீனா உருவாக்க வாய்ப்புண்டு. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சராசரி சுங்க வரி விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. நவம்பர் திங்கள் நடத்தப்பட்ட 2வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் விருப்ப வர்த்தகப் பரிவர்த்தனைத் தொகை 7113 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. முதலாவது பொருட்காட்சியில் இருந்ததை விட இது 23 விழுக்காடு அதிகம். உயர் தர வளர்ச்சிக்கான நெறிவரைத்திட்டமாக திகழும் இந்த ஆவணத்தின்படி, இறக்குமதி சுங்க வரி மற்றும் முறைமை ரீதியான செலவுகளைச் சீனா மேலும் குறைத்து, இறக்குமதி வர்த்தகத்தை முன்னேற்றும் முன் மாதிரி மண்டலத்தை உருவாக்கும். வர்த்தக சமநிலை மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்ற சீனாவின் ஆவலை இது வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்