மக்கௌ அடிப்படைச் சட்டம் செயல்படுத்தப்பட 20ஆவது ஆண்டு நிறைவு

மோகன் 2019-12-03 16:48:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மக்கௌ சீனாவுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன மக்கள் குடியரசு மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அடிப்படைச் சட்டம் செயல்படுத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு கலந்துரையாடல் கூட்டம் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவருமான லீ ட்சான்சூ இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய உரைநிகழ்த்தினார்.

“ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற நடைமுறைப் போக்கில், நாட்டு இறையாண்மை பாதுகாப்பைச் சீர்குலைப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அதிகாரம் மற்றும் அடிப்படை சட்ட அதிகாரத்தை ஆத்திரமூட்டுவது, சிறப்பு நிர்வாக பிரதேசத்தைப் பயன்படுத்தி, தாய்நாட்டின் பிற இடங்களில் சீர்குலைவு நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவற்றைச் சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்று லீ ட்சான்சூ கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்