புத்தாக்கம்:சீனா மற்றும் உலகின் புதிய வாய்ப்பு

இலக்கியா 2019-12-28 15:16:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லாங்மார்ச்-5 ஏவூர்தி, தற்போது சீனாவின் மிக அதிக சுமை திறன் வாய்ந்த புதிய தலைமுறை ஏவூர்தியாகும். 200க்கும் அதிகமான புதிய மையத் தொழில் நுட்பங்கள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஒரே நாளில், சீனாவின் பெய் தாவ்-3 அமைப்பு முறை, உலகிற்குச் சேவை புரிந்த ஓராண்டின் தகவல்களும் வெளியிடப்பட்டன. 2019ஆம் ஆண்டில் 7 ஏவூர்திகளின் மூலம் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. பெய் தாவ்-3 அமைப்பு முறை, உலகிற்குச் சேவை வழங்கும் புதிய யுகத்தில் நுழைந்துள்ளது என்பதை இத்தகவல்கள் காட்டுகின்றன.

புத்தாக்கம், சீனா தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதற்கு வலுமையான உந்து சக்தியாகத் திகழ்கிறது. தற்சார்புப் புத்தாக்கத்தில் ஊன்றி நின்றுள்ள போதிலும், சீனா எப்போதும் திறப்பு மற்றும் பகிர்வு கொண்ட சர்வதேச ஒத்துழைப்புச் சிந்தனையைப் பின்பற்றி வருகிறது. தொழில் நுட்பப் புத்தாக்கத்தில் சீனாவின் திறப்பு மற்றும் பகிர்வு சிந்தனை, உலகளவில் வளர்ச்சியின் புதிய உந்து சக்தி மற்றும் வழிமுறைகளைத் தேடுவதற்கும், பொருளாதாரம் மந்த நிலையைச் சந்திக்கும் இடர்பாட்டு எதிர்ப்பு ஆற்றலுக்கும் உறுதுணையாகும் என்பதில் ஐயமில்லை.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்