உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனாவின் தொடர்ச்சியான முயற்சிகள்

​ வாணி 2019-12-31 18:52:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2019ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் உலக மயமாக்கப் போக்கிலும் உலகில் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் மேற்கொண்ட முயற்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

20 நாடுகள் குழு, பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு முதலிய பன்னாட்டு ஒத்துழைப்பு மேடைகள் மூலம், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புமுறையைப் பேணிக்காக்க வேண்டும் என்ற கருத்தில் சீனா ஊன்றி நின்று வருகின்றது. ஒரு நேர்மையான மற்றும் நியாயமான உலக மேலாண்மை அமைப்புமுறையை உருவாக்க சீனா பாடுபட்டு வருகின்றது.

உலகளவில் முக்கியமான அனைத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சீனா செயலாக்க முறையில் பங்கெடுத்து வருகின்றது. கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சீனா அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது, உலகளவில் இரு தரப்புறவுகள், பல தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் அதிக இன்னல்கள் தோன்றியுள்ள போதிலும், சீனா தயக்கமின்றி அவற்றைச் சமாளிக்கப் பாடுபடும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்