நியூயார்க் டைம்ஸின் ஆதரமற்ற செய்தியின் மீது சீனா மனநிறைவின்மை

வாணி 2020-01-03 19:13:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நியூயார்க் டைம்ஸ் அண்மையில் கட்டுரை ஒன்றில், சீனாவின் சின்ச்சியாங் பிரதேச அரசு உய்கூர் இனம் உள்ளிட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களைக் கட்டாய உழைப்பில் ஈடுபட நிர்பந்தித்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை.

உலகளவில், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் பிரதேசங்களும் வளர்ச்சி குன்றியன என சொல்லலாம். ஆகவே, பொருளாதாரத்தை வளர்த்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல் ஆகியவை பயங்கரவாத்த்தை ஒடுக்கி சமூக நிதானத்தை மீட்பதற்கான அடிப்படை வழிமுறையாகும். இது சர்வதேசச் சமூகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுமாகும்.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட இந்தச் செய்தியில் சின்ச்சியாங்கின் எந்தவொரு அதிகாரியின் பேட்டி கூட இல்லை. அதோடு அதிலுள்ள தரவுகளுக்கும் தக்க ஆதரங்களும் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்