சர்வதேச உறவில் ஆயுத ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு சீனா எதிர்ப்பு

மதியழகன் 2020-01-05 17:19:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச உறவில் ஆயுத ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் மூலம் அதிகப்பட்ச அளவில் அழுத்தம் கொடுத்து எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 4ஆம் நாள் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃபை தொலைப் பேசி மூலம் தொடர்பு கொண்டபோது வாங்யீ இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது, ஈரானிய ராணுவத் தளபதி தாக்குதலுக்குள்ளான சம்பவம் குறித்து, சாரிஃப் ஈரானின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அமெரிக்காவின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளதோடு, அமெரிக்காவின் செயல் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாங்யீ அப்போது கூறுகையில்,

சர்வதேச உறவின் அடிப்பைடக் கோட்பாட்டை மீறியுள்ள அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, பிரதேச அளவில் தீவிர பதற்றத்தை ஏற்படுத்தும். ஆயுத ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்