சீன-கிரிபாதி உறவின் நிலையான வளர்ச்சி: சீனத் தலைமை அமைச்சர்

சரஸ்வதி 2020-01-06 17:54:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள கிரிபாதி அரசுத் தலைவர் டானேதி மாமௌவுடன் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 6ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

சொந்த நாட்டின் தொழில் நிறுவனங்கள், சந்தைமயமாக்கம் மற்றும் வணிகமயமாக்கம் என்ற கொள்கையின்படி, ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்கு சீன அரசு ஆதரவளித்து வருகிறது. கிரிபாதி உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகளுடன் சேர்ந்து, காலநிலை மாற்றப் பிரச்சினையில் சீனா சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறது. கூட்டு மற்றும் வேறுபாடு என்ற முறையில் பொறுப்பேற்று, தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக் கட்டுக்கோப்புக்குள் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாக லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

சீனத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதை கிரிபாதி வரவேற்கிறது. மேலும், இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சியையும் செழுமையையும் கூட்டாக நனவாக்கும் என்று டானேதி மாமௌ தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்