2019ஆம் ஆண்டு சீனாவின் வரி குறைப்பு தொகை 236000 கோடி யுவான்

மோகன் 2020-01-13 16:58:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு சீனாவின் வணிக சூழல் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஆக்கத் தொழில், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான வரி குறைப்பு தெள்ளத்தெளிவாக பயனளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வரி குறைப்பு தொகை 2 இலட்சத்து 36 ஆயிரம் கோடி யுவானை எட்டியது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

மதிப்பு கூட்டு வரி குறைப்பு அளவில் ஆக்கத் தொழில் 70 விழுக்காட்டை வகித்தது. சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் வரி குறைப்பு தொகை 25 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. தனியார் தொழில் நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி உயிராற்றல் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்