ரென்மின்பியின் மாற்றுவிகிதம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு

பூங்கோதை 2020-01-14 17:35:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நாணய மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலிருந்து சீனாவை நீக்குவதாக அமெரிக்க நிதி அமைச்சகம் ஜனவரி 13ஆம் நாள் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 14ஆம் நாள் பேசுகையில், உண்மையிலே, சீனா ஒருபோதும் நாணய மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடாக அல்ல. அமெரிக்காவின் இந்தப் புதிய முடிவு, உண்மைக்கும், சர்வதேச சமூகத்தின் பொது கருத்துக்கும் பொருந்தியது என்றார்.

மேலும், மாற்றுவிகிதத்தின் சந்தைமயமான சீர்திருத்தத்தைச் சீனா உறுதியாக ஆழமாக்கி, ரென்மின்பியின் மாற்றுவிகிதம் சீரான வரம்புக்குள் இயங்குவதைச் சீனா நிலைநிறுத்தும் என்றும் கெங் ஷுவாங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்