நாட்டின் அமைப்புமுறை ரீதியான மேன்மையைப் பயன்படுத்தி கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல முடியும்: நம்பிக்கை

தேன்மொழி 2020-02-04 12:12:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி பிப்ரவரி 3ஆம் நாள் கூட்டம் நடத்தியது.

இக்கூட்டத்தில், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகள் கேட்டறியப்பட்டதோடு, அடுத்தக் கட்டப் பணிகளின் ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தைச் செவ்வனே செய்வது தற்போதைய கட்டத்தின் முக்கியபணியாகும் என்று வலியுறுத்தினார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளில், சீனத் தனிச்சிறப்பியல்பு சோஷலிசம் போன்ற நாட்டு அமைப்புமுறையும் நிர்வாக அமைப்புமுறையும் உருவாக்கப்பட்டன. மக்கள் முதன்மை உள்ளிட்ட கருத்துகளின் நடைமுறையாக்கத்தில், அமைப்புமுறை ரீதியான மேன்மைகள் பல துறைகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளன. அமைப்புமுறையின் மேம்பாடு, சீனாவின் வளர்ச்சிக்கு அடிப்படை உத்தரவாதம் அளிப்பதோடு, கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிக்கும் உறுதியான ஆதரவு அளிக்கின்றது. இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைப் பொருட்கள் மற்றும் வாழ்க்கைப் பொருட்களின் விநியோகத் துறையில் இடைவிடாமல் முன்னேற்றங்கள் பெறப்பட்டுவருகின்றன.

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி கடுமையாக இருந்த போதிலும், நாட்டின்அமைப்புமுறையின் மேம்பாட்டையும் பொது மக்களின் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி, கரோனா வைரஸ் தடுக்கும் பணியில் சீனா வெற்றி பெறுவது உறுதி என்று நம்புகின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்