இந்தியா- அமெரிக்கா இடையே இரண்டு ராணுவ வர்த்தக உடன்படிக்கை

2020-02-14 10:33:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 24ஆம் நாள் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, 350 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரண்டு ராணுவ வர்த்தக உடன்படிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் எட்டியுள்ளன. இந்தியா அமெரிக்காவிலிருந்து 24 MH-60 ரக ஹெலிகாப்டர்கள், 6 அபாச்சி (Apache) ஹெலிகப்டர்கள் உள்ளிட்ட 30 கனரக ராணுவ ஹெலிகப்டர்களை வாங்கவுள்ளது என்று இந்திய டைம்ஸ் எனும் செய்தித்தாள் 13ஆம் நாள் இத்தகவல் தெரிந்த ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

இந்தியாவும் அமெரிக்காவும் இவ்விரு ராணுவ வர்த்தக உடன்படிக்கைகளைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா அமெரிக்காவுடன் எட்டியுள்ள தேசியப் பாதுகாப்பு உடன்படிக்கைகளின் மொத்த மதிப்பு 2000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்