இராணுவ அதிகாரப் பயன்பாட்டில் டிரம்ப் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கை

வான்மதி 2020-02-14 15:56:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் செனெட் அவையில், 13ஆம் நாள் வாக்கெடுப்பு மூலம் போர் ஆற்றல் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின்படி, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ போர் அறிவிப்பு அல்லது தெளிவான ஒப்புதல் இல்லாத நிலையில், அரசுத் தலைவர் அமெரிக்காவின் இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரான் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவசரமாகக் கையாள வேண்டிய தாக்குதல் அச்சுறுத்தலை அமெரிக்கா எதிர்கொள்ளும் போது இராணுவ ஆற்றல் பயன்பாடு அவசியமாகவும் உகந்ததாகவும் இருக்கும் என்பது இதற்கு விதிவிலக்கு.

அரசுத் தலைவரின் மறுப்புரிமையைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை நிராகரிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்