ஷெங்கன் பிரதேசத்தில் சீன பயணிகளுக்கு தடையில்லை: யி யூ

சரஸ்வதி 2020-02-14 16:29:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதாரத் துறை அமைச்சர்களின் அவசரக் கூட்டம் 13ஆம் நாள் நடைபெற்றது. தற்போதைய நிலைமையின்படி, விசா இல்லாமல் ஷெங்கன் பிரதேசங்களில் சீன பயணியர்கள் செல்வதற்குத் தடைவிதிக்கத் தேவையில்லை. சீனாவின் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மீது ஆக்கப்பூர்வமான மனப்பாங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஸ்டெல்லா கிரியகிடஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்ஷூவாங் 14ஆம் நாள் வரவேற்பு தெரிவித்துள்ளார். வைரஸ் தடுப்புப் பணி என்பது, எல்லையற்றது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், சர்வதேசச் சமூகம் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்