உலகம் சீனாவை தவிர்த்து விட முடியாது
பிப்ரவரி 16ஆம் நாளில், சீனாவில் இரு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று, உலக சுகாதார அமைப்பை சார்ந்த நிபுணர்கள் குழு, பெய்ஜிங்குக்கு வந்து, சீனாவின் தொடர்புடைய வாரியங்களையும் நிபுணர்களையும் சந்தித்து, கொவைட் 19 வைரஸ் பற்றிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
மற்றொன்று, சீனாவின் ஹே நான் மாநிலத்தின் செங் சோ நகரிலிருந்து, மத்திய ஆசியாவுக்கு செல்லும் 41 பெட்டிகளை கொண்ட தொடர் வண்டி சேவை தொடங்கப்பட்டது. சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் தொடர் வண்டி இயல்பாக இயங்குவதை இது வெளிகாட்டியது.
சீனா வெளிப்படை தன்மையில் நிலைத்து நிற்பதையும், சர்வதேச சமூகத்துடன் இணைந்து, கொவைட் 19 வைரஸ் பரவலைத் தடுப்பதையும், பொருளாதார சமூக நடவடிக்கைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும், இந்த இரு சம்பவங்களும் உணர்த்துகின்றன. இவை, சீன பொது மக்களின் நலனைப் பேணிக்காப்பதோடு, உலக நலனுக்கு துணை புரியும். சீனாவை தவிர்த்து இயங்க நினைக்கும் சில நாடுகளின் விருப்பம், வேடிக்கையானது.
கொவைட் 19 வைரஸ் பரவல் தொடங்கிய போது, சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களும், அரசியலாளர்களும் தவறான கருத்துகளை வெளியட்டனர். சீனாவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வதந்திகளைப் பரப்பினர்.
உலகமயமாக்க காலத்தில், ஒரு நாட்டுடனான தொடர்புகளை துண்டிக்க நினைக்கும் கருத்து மிக தவறானது. கொவைட் 19 வைரஸை எதிர்க்கும் போது, சரியான அளவைத் தாண்டி, சொந்த நாட்டின் நலனை மட்டும் வலியுறுத்துவது, குழப்பத்தை ஏற்படுத்தும்.
மனித குலம் எதிர்நோக்கும் பல்வேறு அறைகூவல்களை எந்த நாடும் தனியாக சமாளிக்க முடியாது. கொவைட் 19 வைரஸ் பரவலின் மூலம் இதை நாம் உணரலாம்.
இப்போது வரை, உலகில் 160க்கு மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். சில பத்து நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் பொது மக்கள் சீனாவுக்கு உதவி அளித்துள்ளனர்.
ஏதோ நாடுகளுடனான தொடர்புகளை துண்டிக்க நினைப்பது மிக தவறானது. ஒத்துழைப்பு மேற்கொள்ளும் மனித நேயம், நிச்சயமாக வெற்றி பெறும்.
அதிகம் படிக்கப்பட்டவை
புதிய செய்திகள்
- சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்
- சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்ட��்
- அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்
- ஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு