இலங்கைக்கு சீனாவின் உயர்வேகத் தொடர்வண்டிகள் ஏற்றுமதி

மோகன் 2020-03-04 11:30:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

டீசல் மற்றும் மீன்சாரத்தில் இயங்கும் சீனாவின் 40 உயர்வேகத் தொடர் வண்டிகள் மார்ச் 3ஆம் நாள் ஷான் தொங் மாநிலத்தின் சிங் தாவ் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கையின் எஸ்-14 திட்டப்பணிக்கான அனைத்து முன்பதிவுகளையும் சீனா திட்டப்படி நிறைவேற்றியுள்ளது.
தொற்று நோய் பாதிப்பு உள்ள சூழலில், இலங்கையின் இத்திட்டப்பணியை எவ்விதமும் பாதிக்கக் கூடாது என்ற விழிப்புடன், பொருள் கொள்முதல், போக்குவரத்து, தயாரிப்பு, சேமிப்பு, ஒப்படைப்பு ஆகியவற்றுக்கான விரிவான உய்த்துணர்தல் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு சிறப்பு திட்டத்தை சீனத் தரப்பு உருவாக்கி, இத்திட்டபணி தடையின்றி மீண்டும் துவங்குவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்